தஞ்சாவூர்:  அமமுக பொதுச் செயலராக டிடிவி தினகரன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  மேலும் இந்த கூட்டத்தில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன், கடந்த 2018-ஆம் ஆண்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிகவுடன் இணைந்து தேர்தலை சந்தித்த டிடிவி தினகரன்  நடைபெற்ற மடீநுது  கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்தித்துழரு.

இந்த நிலையில், இன்று தஞ்சாவூர் மஹாராஜா மஹகாலில் இன்று டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் 4-ஆவது பொதுக் குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு  அக்கட்சியின் பொது செயலாளர் டிடிவி தினகரன் தலைமை தாங்கினார். இதில்,  மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில், பொதுக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஒன்றிணைந்து ஒருமனதாக டிடிவி தினகரனை மீண்டும் பொதுச் செயலாளராக தேர்வு செய்துள்ளனர்.  இதைத் தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அம்மா-மக்கள்-முன்னேற்றக்-கழக-செயற்குழு-பொதுக்குழுவில்-நிறைவேற்றப்பட்ட-தீர்மானங்கள்-07.10.2024