பெங்களூரு:

ரட்டை இலை சம்பந்தமான தேர்தல் கமிஷனின் விசாரணை இன்று முடிவடையும் என எதிர்பார்த்திருக்கிற நிலையில், டிடிவி தினகரன் இன்று திடீரென பெங்களூரு சென்று, சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து பேசினார்.

உச்சநீதி மன்ற உத்தரவுபடி வரும் 10ந்தேதிக்குள் இரட்டை இலை குறித்து தேர்தல் கமிஷன் முடிவு எடுக்க வேண்டிய சூழலில் இன்றும் இரட்டை இலை சம்பந்தமாக விசாரணை நடைபெறுகிறது.

இன்றையை விசாரணையை தொடர்ந்து, இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக பெயர் போன்றவை இபிஎஸ், ஓபிஎஸ் அணிக்கே தேர்தல் கமிஷன் ஒதுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், டிடிவி தினகரன் இன்று திடீரென பெங்களூர் சென்றார். அங்கு பரப்பன அக்ரஹார சிலையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையின்போது, இரட்டை இலை இபிஎஸ் ஓபிஎஸ் அணிக்கு ஒதுக்கப்பட்டால், மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்தும், எந்த பெயரில் கட்சியை தொடரலாம் என்பது குறித்தும் இருவரும் விவாதித்ததாக டிடிவி ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.