சென்னை,

ரட்டை இலையை தனது அணிக்கு ஒதுக்க லஞ்சம் கொடுத்த புகாரின் பேரில் தினகரன் கைது செய்யப்படுவார் என்று பரபரப்பாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்நிலையில், இன்று காலை முதல் மூத்த வழக்கறிஞர்களுடன் டிடிவி தினகரன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.

தேர்தல் கமிஷனில் இரட்டைஇலையை பெற பிரபல தரகரும், தொழிலதிபருமான  சுகேஷ் சந்திரசேகர் என்பவரிடம்  டிடிவி தினகரன் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் கொடுத்ததாக கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் கொடுத்த வாக்குமூலத்தை தொடர்ந்து, அதற்கான ஆதாரம் சிக்கி உள்ளதாகவும், இதுகுறித்து டிடிவி தினகரனிடம் விசாரணை நடத்தப்படும் என்று  டெல்லி குற்றப்பிரிவு துணை ஆணையர் மதுர் வர்மா கூறியிருந்தார்.

இந்நிலையில், டில்லி போலீசார் தன்னை செய்யக்கூடும் என்று அஞ்சிய தினகரன், முன்ஜாமின் பெற மூத்த வழக்கறிஞர்களான ஜீவசேனன், குமார் ஆகியோருடன்  ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையின்போது மூத்த தமிழக அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன்  மற்றும் டில்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன் காரணமாக  தமிழக அரசியலில் பரபரப்பு நிலவி வருகிறது.