ஈரோடு
தெற்கு ரயில்வே ஈரோடு – செங்கோட்டை ரயில் சேவையில் 2 நாட்களுக்கு மாற்றம் செய்துள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்.
”பாசூர் ரயில் நிலையத்துக்கும், ஊஞ்சலூர் ரயில் நிலையத்துக்கும் இடையே ரெயில்வே பாலம் பராமரிப்பு பணிகள் இன்று (வியாழக்கிழமை), நாளை மறுநாள் (சனிக்கிழமை) என 2 நாட்கள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி ஈரோடு-செங்கோட்டை பயணிகள் ரயில் மேற்கண்ட 2 நாட்களும் ஈரோட்டில் இருந்து இயக்கப்படாமல் கரூரில் இருந்து புறப்பட்டு செங்கோட்டை நோக்கி செல்லும். இதேபோல் செங்கோட்டையில் இருந்து ஈரோட்டுக்கு இயக்கப்படும் பயணிகள் ரெயில் இந்த 2 நாட்கள் மட்டும் செங்கோட்டையில் இருந்து கரூர் வரை மட்டுமே இயக்கப்படும்.
மேலும் ஈரோட்டில் இருந்து திருச்சிக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில் கரூரில் இருந்து திருச்சி வரையும், திருச்சியில் இருந்து ஈரோட்டுக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில் திருச்சியில் இருந்து கரூர் வரையும் மேற்கண்ட 2 நாட்கள் மட்டும் இயக்கப்படும்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.