சென்னை ரயிலில் கொடுமை : கழிப்பறையில் மாணவியைப்  படம் பிடித்த பரிசோதகர்..

Must read

சென்னை ரயிலில் கொடுமை : கழிப்பறையில் மாணவியைப்  படம் பிடித்த பரிசோதகர்..

கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர், சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை வந்து கொண்டிருந்தார்.

அதிகாலையில் அந்த  மாணவி ரயிலில் உள்ள கழிப்பறைக்குச் சென்றுள்ளார்.

அப்போது, கழிப்பறையின் ஜன்னலோரம் நின்று கொண்டு, செல்போன் மூலம் தன்னை யாரோ படம் பிடிப்பதைக் கண்டு அலறினார்.

இந்த சத்தம் கேட்டு சக பயணிகள் ஓடி வந்தனர்.

மாணவியை, ரயிலின் டிக்கெட் பரிசோதகர் செல்போனில் ப   டம் பிடித்ததைக் கண்டு அதிர்ந்து போனார்கள்.

அவரை அரக்கோணம் ரயில்வே போலீசில் ஒப்படைத்தனர்.

 ரயிலில் இந்த கீழ்த்தரமான செயலில் ஈடுபட்ட டிக்கெட் பரிசோதகர் பெயர் மேகநாதன் என்றும், அவர் சேலம் மாவட்டம் சூரமங்கலத்தை சேர்ந்தவர் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் செய்து ஜெயிலில் அடைத்தனர்.

 –பா.பாரதி.

More articles

Latest article