சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுவதை முன்னிட்டு,  25-ந்தேதி முதல் சென்னையில் இருந்து மாமல்லபுரத்துக்கு 5 இலவச பஸ்கள் இயக்கப்படும் என தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் அறிவித்து உள்ளது.

இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாட்டில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தமிழகஅரசு  செய்து வருகிறது.  வருகிற 28-ந்தேதி செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்கி, ஆகஸ்ட் 10-ந்தேதி வரை நடைபெற உள்ளது. தொடக்க விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ளது.

செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி சென்னையில் இருந்து மாமல்லபுரத்துக்கு இலவச பஸ்களை இயக்கப்படும் என  தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் இயக்குகிறது. வருகிற 25-ந்தேதி முதல் ஒருமணி நேரத்துக்கு ஒரு தடவை இலவச பஸ்கள் மாமல்லபுரத்துக்கு இயக்கப்படும் என்றும், 5 பேருந்துகள் இதற்கான பணியில் ஈடுபடும் என்றும் அறிவித்து உள்ளது.

இலவச பேருந்து சேவையானது, அடையாறு மத்திய கைலாஷில் இருந்து புறப்படும் என்றும்.  இந்த பேருந்துகள் ராஜீவ்காந்தி சாலை வழியாக சோழிங்கநல்லூர் சென்று, அங்கிருந்து ஈ.சி.ஆர். சாலை வழியாக மாமல்லபுரத்துக்கு சென்றடையும்.

இந்த இலவச பேருந்துகள் திருவாண்மியூர் அடுத்த எஸ்.ஆர்.பி.ஸ்டூல்ஸ், பி.டி.சி. குவார்டர்ஸ், முட்டுக்காடு உள்பட 19 இடங்களில் நின்று, பயணிகளை ஏற்றி  செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இலவச பேருந்து சேவையானது வரும் 25ந்தேதி முதல் செஸ் போட்டிகள் முடிவடையும் நாள் வரை இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.