திருமலை திருப்பதியில் நாளொன்றுக்கு சராசரியாக சுமார் 2.5 லட்சம் லட்டு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த லட்டு தயாரிக்கும் பணியை இயந்திரங்கள் மூலம் செய்ய திருப்பதி தேவஸ்தானம் முடிவெடுத்துள்ளது.
இதற்காக பல்வேறு இயந்திரங்களைக் கொண்ட ஒரு அமைப்பை இந்த ஆண்டு இறுதிக்குள் உருவாக்கவுள்ளது.
நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இயந்திரங்களைக் கொண்டு லட்டு தயாரிக்கும் இந்த திட்டத்திற்கு 50 கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
திருப்பதி செயல் அலுவலருடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பேசிய திருப்பதி செயல் அலுவலர் ஏவி தர்மா ரெட்டி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இயந்திரங்களுடன் திருப்பதி லட்டு தயாரிக்கும் பணி டிசம்பர் மாதம் முதல் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.