சென்னையில் ஓடும் பஸ்சில் கொள்ளை முயற்சி!

சென்னை,

சென்னையில் இன்று அதிகாலையில் தனியார் பஸ்சில் கொள்ளை முயற்சி நடைபெற்றது. கொள்ளையர்களை பிடிக்க முயற்சிக்கும்போது, அவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

சென்னை அரும்பாக்கம் அருகே பஸ் வந்தபோது இந்த கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது.

சென்னையிலிருந்து தனியார் பஸ் ஒன்று கோவை நோக்கி இன்று காலை சென்றுள்ளது. இந்த பஸ் கோயம்பேடு அடுத்த   அரும்பாக்கம் பகுதியில் வந்த போது, பஸ்சில் ஏறிய 5 பேர் பயணி களிடம் கொள்ளையடிக்க முயற்சித்தனர்.

உஷாரான பயணிகள் சுற்றி வளைத்து, கொள்ளையடிக்க  முயன்ற 5 பேரையும் சுற்றி வளைத்து பிடித்து, போலீசில் ஒப்படைக்க முயன்றனர்.  ஆனால், 5 பேலிரல் 4 பேர் தப்பி ஓடி விட்டனர்.

மீதமுள்ள ஒருவர் மட்டுமே போலீசிடம் ஒப்படைக்கப்பட்டார்.

விசாரணையில் பிடிபட்ட நபர் திருவள்ளூரைச் சேர்ந்த தினேஷ் என்பதும், அவர் மீது ஏற்கனவே கொலை வழக்கு உள்ளதும் தெரிய வந்துள்ளது.

சென்னை நகருக்குள்ளே.. அதுவும் பிரதான சாலையிலேயே இந்த கொள்ளை முயற்சி நடைபெற்றி ருப்பது சென்னைவாசிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.


English Summary
Trying to rob the bus in Chennai neyar Koyambedu today morning