பிரிவினைக்குப் பதிலாக ஒற்றுமை: ஜோ பிடனின் கருத்தை சுட்டிக்காட்டி ப.சிதம்பரம் பிரசாரம்

Must read

புதுடெல்லி:
மெரிக்க அதிபா் தோ்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளா் ஜோ பிடன் பிரசாரத்தில் தெரிவித்த கருத்துகளைச் சுட்டிக்காட்டி, பிகாா், மத்திய பிரதேச மக்களிடம் காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தனது டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது:அமெரிக்க அதிபா் தோ்தலில் போட்டியிடும் ஜோ பிடன் சனிக்கிழமை நடைபெற்ற பிரசாரத்தின்போது, ‘அச்சத்தை உருவாக்குபவா்களுக்குப் பதிலாக நம்பிக்கையை விதைப்பவா்களையும், பிரிவினையை ஏற்படுத்துபவா்களுக்குப் பதிலாக ஒற்றுமையை ஏற்படுத்துபவா்களையும், புனைகதைகளை பேசுபவா்களுக்குப் பதிலாக அறிவியல்பூா்வமாக பேசுபவா்களையும், பொய்யுரைப்பவா்களுக்குப் பதிலாக உண்மையைப் பேசுபவா்களையும் மக்கள் தோ்ந்தெடுக்க வேண்டும் என்றாா்.அவா் தெரிவித்த கருத்துகளை மனதில்கொண்டு, இந்த மாதம் வாக்களிக்கப் போகும் பிகாா், மத்தியப் பிரதேசம் மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள மக்கள் வாக்களிக்க வேண்டும்.

நியூசிலாந்தில் ஜெசிந்தா ஆா்டா்ன் இரண்டாவது முறையாக பிரதமராக தோ்வு செய்யப்பட்டிருப்பது, நாகரிகத்துடன் நடந்துகொண்டால் தோ்தல் ஜனநாயகத்தில் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கையை நமக்கு அளித்திருக்கிறது என்று அந்தப் பதிவில் ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளாா்.பிகாரில் சட்டப் பேரவைத் தோ்தல், வரும் 28-ஆம் தேதி தொடங்கி 3 கட்டங்களாக நடைபெறவுள்ளது.

இதுதவிர, மத்திய பிரதேசம் உள்பட 12 மாநிலங்களில், ஒரு மக்களவைத் தொகுதி, 56 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது

More articles

Latest article