மும்பை:
நம்பிக்கை வாக்கெடுப்புக்காக மகாராஷ்ட்ர சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் நாளை நடைபெற உள்ளது.

இதையடுத்து. தமது ஆதரவாளர்களுடன் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கோவாவில் இருந்து மும்பைக்குத் திரும்பினார்.
தொடர்ந்து பாஜக எம்.எல்.ஏக்கள், சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மற்றும் சுயேட்சைகளுடன் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய ஷிண்டே தமக்கு மொத்தம் 170 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா எம்.எல்.ஏக்கள் அனைவரும் கட்டாயம் சட்டமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று கட்சி கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது.
[youtube-feed feed=1]