விபத்தில் சிக்கியவருக்கு உதவிய ராகுல் காந்தி

Must read

மலப்புரம்:
கேரள மாநிலம் மலப்புரத்தில், விபத்தில் சிக்கிய இருசக்கர வாகன ஓட்டியை, ராகுல் காந்தி மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

வண்டூரில் நடைபெற்ற காங்கிரஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, விருந்தினர் மாளிகைக்கு சென்றார். வட புரத்தில் சென்று கொண்டிருந்த போது, சாலையில் இருசக்கர வாகனம் ஒன்று விபத்து ஏற்பட்டிருந்த‌து. உடனடியாக தனது வாகனத்தை நிறுத்திய ராகுல் காந்தி, விபத்தில் சிக்கிய நபரை மீட்டு, தன்னுடன் வந்த ஆம்புலன்சில் ஏற்றி நிலம்பூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

More articles

Latest article