சென்னை,

ரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் கூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவில் ஏற்பட்டுள்ள குழப்பம் மற்றும் நீட் தேர்வு காரணமாக அனிதா தற்கொலை போன்ற தொடர் பிரச்சினைகளால் தமிழகத்தில் அசாதாரணமான சூழல் நிலவி வருகிறது.

இதுகுறித்து அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில், இன்று எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின், தமிழக பிரச்சினைகளால் மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை  செய்ய எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இன்று மாலை இந்த கூட்டம் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில், சென்னையில் நாளை  (5-ம்தேதி) அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்முதல்-அமைச்சர் பழனிசாமி தலைமையில் கட்சி தலைமை அலுவலகத்தில் கூட்டம் நடைபெறும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே, எடப்பாடிக்கு ஆதரவு கிடையாது என டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் கவர்னரை சந்தித்து மனு கொடுத்துள்ள நிலையில், திமுக உள்பட எதிர்க்கட்சிகளும் ஆட்சிக்கு எதிராக கவர்னரிடமும், ஜனாதிபதியுடம் மனு கொடுத்து, எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று கோரியுள்ள பரபரப்பான இந்த சூழ்நிலையிலும், நீட் எதிர்ப்பு காரணமாக அனிதா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் தமிழகமே கொதித்தெ ழுந்துள்ள நிலையில், மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் கூட்டப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் வரும் 12-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ள்  நிலையில், திடீரென   எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருப்பது பல்வேறு யூகங்களை கிளப்பி உள்ளது.