பெங்களூரு:

ர்நாடக சட்டமன்றத்தில் குமாரசாமி அரசுமீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று மாலை 6 மணிக்குள் நடத்தி முடிக்கவேண்டும் என்று சபாநாயகர் ரமேஷ் உத்தரவிட்டு உள்ளார்.

குமாரசாமி அரசுக்கு எதிராக 15 எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ள நிலையில், ஆட்சி கவிழும் சூழல் நிலவி வருகிறது. இது தொடர்பாக குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு  தீர்மானம் தொடர்பான விவாதம் கடந்த 18ந்தேதி (வியாழக்கிழமை) தொடங்கியது. அன்றையதினம் வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விவாதம் தொடர்ந்து கொண்டே சென்றது. தொடர்ந்து 19ந்தேதியும் விவாதம் நடைபெற்றது. அன்றைய தனம் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று கவர்னரும் உத்தரவிட, அதை சபாநாயகர் கண்டு கொள்ளாமல், அவையை  22ந்தேதி (திங்கட்கிழமை) ஒத்தி வைத்ததுடன், விவாதம் முடிந்த பிறகே வாக்கெடுப்பு நடத்த முடியும் என்று அறிவித்தார்.

நேற்று (22ந்தேதி) சபை கூடியதும்,நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின்மீது விவாதங்கள் தொடங்கி நடைபெற்றது. மேலும் இரண்டு நாட்கள் விவாதங்கள் நடத்த குமாரசாமி கோரிக்கை வைத்திருந்தார். ஆனால், இன்றே (நேற்று) வாக்கெடுப்பு நடத்த இருப்பதாக சபாநாயகர் அறிவித்தார். அதன்படி, மாலை வாக்கெடுப்பு நடத்தப்படாமல் சபை ஒத்தி வைக்கப்பட்டு, பின்னர் இரவு 8 மணிக்கு மேல் தொடங்கியது.

அப்போது, பா.ஜ.க தலைவர் எடியூரப்பா பேச முன்வந்தபோது, காங்கிரஸ் – மஜக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அவர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான வழக்கு உச்சநீதி மன்றத்தில் இருப்பதால் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்று கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் முதல்வர் குமாரசாமி ராஜினாமா செய்துவிட்டார் என்று ஒரு போலியான கடிதமும் சமூகவலைதளத்தில்  வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதொடர்பாக கூச்சல் குழப்பங்களுடன் சபை நள்ளிரவை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.  விடிய விடிய தான் அவையை நடத்தத் தயாராக இருப்பதாக சபாநாயகர்  தெரிவித்தார். ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தாமல் இழுத்தடித்து வந்தார். இதற்கிடையில் பெண் உறுப்பினர்கள் இரவு உணவுக்கு செல்ல வேண்டும் என்று குரல்  கொடுத்தனர்.

அதைத் தொடர்ந்து, இன்று மாலை 4 மணிக்குள் விவாதத்தை முடித்து மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்கவேண்டுமென்று உத்தரவிட்டு சபாநாயகர் அவையை ஒத்தி வைத்தார்.

இந்த நிலையில், சுயேட்சை எம்.எல்.ஏக்கள் 2 பேர் நம்பிக்கை வாக்கெடுப்பை உடனடியாக நடத் தவேண்டும் என்ற கோரி உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.