வாஷிங்டன்,
அமெரிக்க அதிபராக இன்று பதவியேற்கிறார் டொனால்டு டிரம்ப். இதற்கான ஏற்பாடுகள் அதிபர் மாளிகையான வெள்ளைமாளிகையில் செய்யப்பட்டுள்ளது.
கடந்த வருடம் இறுதியில் நடைபெற்று முடிந்த அதிபர் பதவிக்காக தேர்தலில் டிரம்ப் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.
அதைத்தொடர்ந்து பிரபல தொழிலதிபர் டொனால்டு டிரம்பர் அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.
அமெரிக்க நேரப்படி இன்று நண்பகலில் வெள்ளை மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் அதிபராக டிரம்ப் பொறுப்பேற்கிறார்.
நியூயார்க்கைச் சேர்ந்த தொழிலதிபரான டொனால்டு டிரம்ப், கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில், அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஹிலரி கிளிண்டனை குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வென்று அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
புதிய அதிபராக அவர் ஜனவரி மாதம் 20-ம் தேதி பொறுப்பேற்பார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில்,டொனால்ட் டிரம்ப்-ன் அதிகாரபூர்வ நிகழ்ச்சிகளை அவரது பத்திரிகை தொடர்பு செயலாளர் சீன் ஸ்பைசர் வெளியிட்டுள்ளார்.
அதன்படி நேற்றிரவு வெள்ளை மாளிகை அமைந்துள்ள தெருவில் உள்ள ஃப்ளேர் ஹவுஸில் தங்கினார். அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்கும் அனைவரும், இங்கு ஒருநாள் இரவு தங்குவது சம்பிரதாய வழக்கம்.
இதைத் தொடர்ந்து, அமெரிக்க நேரப்படி வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு புனித ஜான் எபிஸ்கோயல் தேவாலயத்தில் நடைபெறும் சிறப்பு பிரார்த்தனையில் டொனால்ட் டிரம்ப், அவரது குடும்பத்தினர் மற்றும் அமைச்சரவையில் இடம்பெறுவோர் பங்கேற்கிறார்கள்.
பின்னர் காலை 9.30 மணிக்கு வெள்ளை மாளிகையின் தெற்கு போர்டிகோவில் டிரம்ப் உள்ளிட்டோருக்கு, அதிபர் பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி ஆகியோர் சிறப்பு தேநீர் விருந்தளிக்கிறார்கள்.
இதைத் தொடர்ந்து காலை 10 மணியளவில் டிரம்ப், துணை அதிபராக பொறுப்பேற்கும் பென்ஸ் ஆகியோரை ஒபாமா, விழா நடைபெறும் இடத்துக்கு அழைத்துச் செல்வார்.
அமெரிக்க நேரப்படி காலை 11 மணியளவில் பதவியேற்வு விழா தொடங்கும்.
சரியாக நண்பகல் வாக்கில் அதிபராக டிரம்ப், துணை அதிபராக பென்ஸ் மற்றும் அமைச்சர்கள் பைபிள் மீது ஆணையிட்டு, பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்கிறார்கள்.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்க காங்கிரஸ் குழு உறுப்பினர்களுடன் டிரம்ப் மதிய உணவு விருந்தில் பங்கேற்பார். பின்னர் அதிபராக முதல் உரை நிகழ்த்துவார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.