வாஷிங்டன்:
அமெரிக்காவில் வெளிநாட்டினர் குடியேற தடை 60 நாட்கள் நீடிக்கும் என்று தெரிவித்துள்ள டிரம்ப், இது பச்சை அட்டைதாரர்களுக்கு (Green card) மட்டுமே பொருந்தும் என்றும் தெரிவித்து உள்ளார்.
கொரோனாவின் தாக்கம் உலக நாடுகளை புரட்டிப்போட்டுவருகிறது. இதனால் உலக நாடுகளின் பொருளாதாரம் கடுமையாக சரிந்து வருகிறது. இந்த நிலையில், அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை கருதி, வெளிநாட்டவர்கள், அமெரிக்காவில் குடியேறுவதற்கு தற்காலிகமாக தடை விதிக்கும் உத்தரவில் நான் கையெழுத்திடுவேன் என்று டிரம்ப் நேற்று டிவிட் போட்டிருந்தார்.
டிரம்பின் இந்த அறிவிப்பு அமெரிக்கர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இவரது திடீர் நடவடிக்கை காரணமாக, அமெரிக்காவில் இந்தியர்கள் உள்பட வெளிநாட்டினர் யாரும் அடுத்த 60 நாட்களுக்கு குடியுரிமை பெற முடியாத நிலை உருவாகி உள்ளது.
இந்த நிலையில், வெளிநாட்டினர் குடியேற விதிக்கப்பட்டுள்ள தடை 60 நாட்களுக்கு அமலில் இருக்கும். அந்த நேரத்தில் பொருளாதார நிலைமைகளின் அடிப்படையில் எந்தவொரு நீட்டிப்பு அல்லது மாற்றங்களையும் முடிவு செய்வேன் என்று தெரிவித்து உள்ளார்.
அமெரிக்காவில் லட்சக்கணக்கான இந்தியர்கள் வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் எச்1பி விசா மற்றும் எல்1 விசா. என பல வகை விசாக்கள் பெற்று அங்கு வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.