இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்தித்த  சமூக ஆர்வலருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில்,  இம்ரான்கானுக்கும் கொரோனா சோதனை செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தானில் இதுவரை கொரோனா வைரசுக்கு 9,749 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  இதுவரை 209 பேர் பலியாகி உள்ளனர். மேலும், 2,156 பேர் குணமாகி உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்து உள்ளது.
இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு  அந்நாட்டின் பிரபல சமூகசேவகரான அப்துல் சதார் எதியின் மகனும் எதி அறக்கட்டளையின் தலைவருமான ஃபைசல் எதி (FaisalEdhi) பிரதமர் இம்ரான்கானை சில நாட்களுக்கு முன்பு சந்தித்து பேசினார்.
தற்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து, பிரதமர்  இம்ரான் கானிடம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.
இம்ரான்கானிடம் பெறப்பட்டுள்ள ரத்த மாதிரிகள்  பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்நாட்டின் தேசிய சுகாதார நிறுவன அதிகாரிகள் கூறுகையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவரின் தொடர்பாளர்களை பரிசோதிப்பது நடைமுறை அதன்படியே பிரதமர் இம்ரான் கானிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.