நியூயார்க்:
மெரிக்க அதிபர் நெருங்கி வரும் நிலையில், பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. தனது போட்டியாளர் டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்கள் பாதிப்பேர் எதற்கும் பயனற்ற உதவாக்கரைகள் என்று ஹிலரி கிளிண்டன் கடுமையாக விமர்சித்துள்ளார். .
நியூயார்க்கில் தேர்தலுக்கு நிதி திரட்டும் கூட்டம் ஒன்றில் அமெரிக்க ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாரளான ஹிலரி  கலந்துகொண்டார்.

ஹிலாரி - ட்ரம்ப்
ஹிலாரி – ட்ரம்ப்

அப்போது அவர், “எனது போட்டியாளர் டிரம்பை ஆதரிப்பவர்களில் சிலர் இனவெறியர், ஆணாதிக்க மனப்பான்மை உடையவர்கள், வெளிநாட்டினர் மீது துவேஷ மனப்பான்மை உடையவர்கள்,  இஸ்லாமிய எதிர்ப்பு கொள்கையு உடையவர்கள்” என்று தெரிவித்தார்.
மேலும், “டிரம்பின் மீதி ஆதரவாளர்கள் பொருளாதாரத்தாலும் அரசாலும் கைவிடப்பட்டதாக கருதுபவர்கள். அவர்கள், மாற்றம் ஏற்படும் என்பதற்கான நம்பிக்கையை இழந்தவர்கள்” என்று சாடினார்.
இதற்கு பதிலடியாக டிரம்பின் பரப்புரை மேலாளர், “இப்படி தரம் தாழ்ந்து பேசுவதன் மூலம்,   மில்லியன் கணக்கான அமெரிக்கர்களை இகழ்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறார் ஹிலாரி” என்று தெரிவித்தார்.