அமெரிக்க (முன்னாள்) அதிபர் ரீகனை கொல்ல முயன்றவர் விடுதலை

Must read

நியூயார்க்:
முப்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன், அமெரிக்க அதிபராக இருந்த ரொனால்ட் ரீகனை சுட்டுக் கொல்ல முயற்சித்த நபர் இன்று மனநல மருத்துவமனையில் இருந்து விடுதலை செய்யப்படுகிறார்.
அமெரிக்க அதிபாராக இருந்த ரெனால்ட் ரீகன், வாஷிங்டனில் உள்ள ஒரு விடுதியின் வெளியே நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காயமடைந்தார். இவருடன் மேலும் இருவர் காயமடைந்தனர். முப்பத்தியைந்து ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த சம்பவம் அப்போது உலகையே உலுக்கியது.

துப்பாக்கிச்சூடு நிகழ்ந்த தருணத்தில்..
துப்பாக்கிச்சூடு நிகழ்ந்த தருணத்தில்..

இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திய ஜான் ஹிங்கிலி ஜூனியர்  என்பவர் கைது செய்யப்பட்டார். அப்போது அவர், பித்துப்பிடித்த நிலையில் இருந்த காரணத்தால் அவர் குற்றவாளி அல்ல என்று நீதிமன்றம் முடிவு செய்தது. மனநோயாளி காப்பகத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
ஜான் ஹிங்கிலி ஜூனியர்
ஜான் ஹிங்கிலி ஜூனியர்

இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம், “ஹிங்கிலியின் மனநிலை தற்போது இயல்பாக இருக்கிறது.  அவருக்கோ அல்லது மற்றவர்களுக்கோ அபாயகரமாக இருக்க மாட்டார்” என்று நீதிமன்றம் தெரிவித்தது.
இதையடுத்து 61 வயதான ஹிங்கிலி, மனநல மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட உள்ளார். விர்ஜினியாவில் உள்ள தன்னுடைய தாய் வீட்டில் வசிக்க உள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article