ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்

Must read

வாஷிங்டன்

மெரிக்க அதிபர் டிரம்ப் ஒருவேளை ஈரான் போரை விரும்பினால் அதுவே அந்நாட்டுக்கு இறுதியாக அமையும்  என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் ஒன்றை அமைத்தார்.    அவருக்கு பிறகு டொனல்ட் டிரம்ப் அதிபராக  பதவி ஏற்றார்.  அவர் ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை கடுமையக விமர்சித்தார்.   அதற்கு ஈரான் கண்டனம் தெரிவித்ததால் அமெரிக்கா அணு சக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகியது.

ஈரான் மீது அதன் பின்பு அமெரிக்கா பொருளாதார தடைகளையும் வர்த்தக தடைகளையும் விதித்தது.   ஈரான் தனது அணு ஆயுத ஒப்பந்தத்தை மற்ற நாடுகளுடன் தொடர்ந்து வருவதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.   இதனால் அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே மோதல் அதிகரித்துள்ளது.

அமெரிக்கா சில தினங்களுக்கு முன்பு வளைகுடா நாடுகளுக்கு ஏவுகணைகள் மற்றும் போர்க்கப்பல்களை அனுப்பி வைத்தது.    இதை ஒட்டி அங்குள்ள அமெரிக்க போர்க்கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.   இது அமெரிக்க  அதிபர் டிரம்ப்புக்கு கோவத்தை அதிகரித்துள்ளது.

அவர் தனது டிவிட்டரில், ”அமெரிக்காவை அச்சுறுத்த வேண்டாம் என ஈரானுக்கு எச்சரிக்கை அளிக்கிறேன்.  ஈரான் ஒருவேளை  அமெரிக்காவுடன் போர் நடத்த வேண்டும் என எண்ணினால் அது ஈரான் நாட்டின் இறுதியாக அமையும்” என அறிவித்துள்ளார்.

More articles

Latest article