ண்டன்

ங்கிலாந்து அரசியை யாரும் தொட்டு பேசக்கூடாது என்னும் அரசு நெறிமுறையை மீறி அமெரிக்க அதிபர் டிரம்ப் தோளில் தட்டிக் கொடுத்து பாராட்டி உள்ளது சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.

இங்கிலாந்து அரசு குடும்பத்தினருடன் சந்திப்பு நடக்கும் போதோ அல்லது ஏதேனும் நிகழ்வு நடக்கும் போதோ ஒரு சில நெறிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அவற்றை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என கூறப்பட்டு வருகிறது. அரச குடும்பத்தை சேர்ந்த யாரையும் மற்றவர்கள் தொடக் கூடாது என்பது ஒரு நெறி முறையாகும். அத்துடன் அரச குடும்பத்தினர் கையை நீட்டினால் மட்டுமே கை குலுக்க வேண்டும்.

நேற்று இங்கிலாந்து அரசி எலிசபெத் வசிப்பிடமான பக்கிங்காம் அரண்மனையில் ஒரு பாராட்டு விழா நடந்தது. இரண்டாம் உலகப் போரின் போது அரசி எலிசபெத் நடவடிக்கைகளை நினைவு கோரி பாராட்டிய அந்த விழாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்துக் கொண்டு உரையாற்றினார்.

டொனால்ட் டிரம்ப் தனது உரையில் இரண்டாம் உலகப் போர் சமயத்தில் அரசி எலிசபெத் மிகவும் திறம்பட நடந்துக் கொண்டதாக பாராட்டு தெரிவித்தார். அத்துடன் அவருடைய நடவடிக்கைகள் உலக அளவில் புகழ் பெற்றுள்ளதையும் குறிப்பிட்டார். அதன் பிறகு அவர் எலிசபெத் ராணியை பாராட்டும் விதமாக அவர் முதுகை தட்டிக் கொடுத்தார்.

டொனால்ட் டிரம்பின் இந்த செய்கை கடும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. அரசு குடும்பத்துக்கான நெறி முறையை அவர் மீறி உள்ளதாக பலரும் டிவிட்டரில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அத்துடன் அரசியை பாராட்ட டிரம்ப் விரும்பி இருந்தால் தூரமாக நின்று தலையை மட்டும் குனிந்து வணக்கம் செலுத்தி இருக்க வேண்டும் எனவும் அது தான் முறையான செயல் எனவும் பலர் கூறி உள்ளனர்