வாஷிங்டன்’
இந்தியாவுக்கு எஃப் 35 ரக ஜெட் விமானக்களை வழங்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.
நேற்று அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ச்ப்ச்ட் அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின் அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்பை இந்திய நேரப்படி இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் சந்தித்தார்.
பிரதமர் மோடி அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதற்காக டிரம்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதிபர் டிரம்பை சந்தித்த பிரதமர் மோடி பல்வேறு முக்கிய அம்சங்களை குறித்து விவாதித்தார்.
பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்,
”இந்தியாவிற்கு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை வழங்கும் நாடாக அமெரிக்கா இருக்கும். இந்தாண்டு முதல் இந்தியாவுக்கு அதிகளவிலான ராணுவ தளவாடங்களை விற்பனை செய்யவுள்ளோம். மேலும், இந்தியாவுக்கு எப் 35 ரக ஜெட் விமானங்களை வழங்கவுள்ளோம்.
உலகம் முழுவதும் தீவிர இஸ்லாமிய பயங்கரவாதத்தின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தியாவும் அமெரிக்காவும் “முன்பு இல்லாத அளவுக்கு” இணைந்து செயல்படும்.
2030ம் ஆண்டுக்குள் இரு நாடுகளின் வர்த்தக பரிவர்த்தனை 500 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இலக்கை நிர்ணயித்துள்ளோம்.விரைவில் இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாவதை உறுதி செய்துள்ளோம்.
எனத் தெரிவித்துள்ளார்.