வாடிகன்: கத்தோலிக்க மத தலைவர் போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வாடிகன் தெரிவித்துள்ளது.

மூச்சு விடுவதில் சிரமப்பட்டு வந்த  போப் பிரான்சிஸ்  இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் போப் பிரான்சிஸ் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்குதீவிர  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் அவரது உடல்நிலை தேறி வருவதாகவும் வாடிகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

88 வயதாகும் கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ்க்கு கடந்த 2021, ஜூலை மாதத்தில் குடல் அறுவை சிகிசை செய்யப்பட்டது. அப்போது போப் பிரான்சிஸ் 10 நாட்கள் அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, கடந்த  2023, ஜூலையிலும் அதே மருத்துவமனையில் அவருக்கு குடலிறக்கத்தை சரிசெய்வதற்கான அறுவை சிகிச்சையும் நடைபெற்றது. இந்த நிலையில் தற்போது மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக  மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ள நிலையில்,   சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சமீபத்திய கூட்டங்களின் போது மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு வந்த போப், தனது தயாரிக்கப்பட்ட கருத்துக்களை பார்வையாளர்களுக்கு வாசிப்பதை அடிக்கடி மறுத்து வருவதுடன்  ஒரு பாதிரியார் உதவியாளரால் கருத்துக்களைப் படிக்க வைக்கத் தேர்வுசெய்து அவர்கள் மூலம் தனது கருத்துக்களை தெரிவித்துவந்ததார்.  தற்போதுமு  சக்கர நாற்காலி மூலம் தனது தேவைகளை நிறைவேற்றி வரும் போஸ், முழங்கால் பிரச்சினைகள், சுவாச நோய்த்தொற்றுகள் மற்றும் முன்கையில் காயம் ஏற்பட்டதன் விளைவாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.