கனடா, மெக்ஸிகோ, சீனா உள்ளிட்ட நாடுகள் மீதான வரி விதிப்பை அமெரிக்க அரசு அதிகரித்துள்ளதை அடுத்து அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளது.

இந்திய ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலரின் மதிப்பு 1 அமெரிக்க டாலருக்கு ரூ. 87.31 ஆக அதிகரித்துள்ளது.

இன்று இந்திய ரூபாயின் மதிப்பு 67 பைசா வரை குறைந்து வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மிகப்பெரும் சரிவை சந்தித்துள்ளது.

எனினும், டிரம்ப் நிர்வாகம் இந்தியா உடனான வர்த்தகங்களுக்கு வரி விதிப்பை அதிகரிக்காததால் இந்திய பொருளாதாரம் வலுவான நிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இருந்தபோதும், அமெரிக்காவின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை இந்திய அரசு கூர்ந்து கவனித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.