டெல்லி: சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களைக் கண்காணிக்க ‘பருந்து கமிட்டி’வய (Eagle Panel)  அமைத்துள்ளது அகில இந்திய காங்கிரஸ் கட்சி. இதில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முக்கிய நபர்கள் 8 பேர்  இடம்பெற்றுள்ளனர்.

சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களைக் கண்காணிக்க AIIC ‘EAGLE’ குழுவை உருவாக்கி உள்ளது.  நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள தற்போதைய அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில் தேர்தல் செயல்முறையை உன்னிப்பாக ஆராயும் நோக்கில், இந்த கமிட்டியை அகில இந்திய காங்கிரஸ் கட்சி அமைத்துள்ளது.

இந்த கமிட்டியானது,   இந்திய தேர்தல் ஆணையத்தின் (ECI) தேர்தல்களைக் கையாள்வதை மேற்பார்வையிடுவது உள்பட பல்வேறு தேர்தல் தொடர்பான பணிகளை கண்காணிக்கும் என்றும், இதற்காக அஜய்மக்கான் உள்பட  எட்டு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ஞாயிற்றுக்கிழமை (2ந்தேதி) அறிவித்தார்.

இதுதோடர்பாக,  அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய தேர்தல் ஆணையத்தால் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் நடத்தப்படுவதை கண்காணிக்க, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, உடனடியாக அமலுக்கு வரும் வகையில், தலைவர்கள் மற்றும் நிபுணர்களின் அதிகாரம் அளிக்கப்பட்ட செயல் குழுவை (EAGLE)அமைத்துள்ளார்.

இந்தக் குழுவில் அஜய் மக்கான், திக்விஜய சிங், டாக்டர். அபிஷேக் சிங்வி, பிரவீன் சக்ரவர்த்தி, பவன் கேரா, குர்தீப் சிங் சப்பல், டாக்டர்.நிதின் ரவுத், சல்லா வம்ஷி சந்த் ரெட்டி ஆகியோர் உறுப்பினர்கள் உள்ளனர்.

இந்த குழுவானது,  முதலில் மகாராஷ்டிர வாக்காளர் பட்டியல் மோசடி பிரச்சனையை எடுத்துக்கொண்டு விரைவில் தலைமைக்கு விரிவான அறிக்கையை இந்தக் குழு சமர்ப்பிக்கும். மேலும், மற்ற மாநிலங்களில் கடந்த கால தேர்தல்களையும் பகுப்பாய்வு செய்யும்.

மேலும், இந்தக் குழு வரவிருக்கும் தேர்தல்கள் மற்றும் நாட்டில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்துவது தொடர்பான அனைத்து பிற பிரச்சனைகளையும் முன்கூட்டியே கண்காணிக்கும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக,  கடந்த ஆண்டு ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல்களில் ஏற்பட்ட தோல்விகளுக்குப் பிறகு, காங்கிரஸ் தேர்தல் முறைகேடு கள் மற்றும் கையாளுதல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது. இதுபோன்ற தவறுகள் எதிர்காலத்தில் நடைபெறுவதை தடுக்கும் வகையில், அதை கண்காணிக்கும் வகையில் பருந்து குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த  EAGLE குழுpவன் முதன்மையான நோக்கம்,   தேர்தல் ஆணையத்தை (EC) கண்காணிப்பதே என்றும், இந்த குழுவானது தனது அய்வு அறிக்கையை,  எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியிடம் அறிக்கை அளிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த குழுவானது,  முதலில் மகாராஷ்டிராவில் வாக்காளர்களின் அதிகரிப்பு குறித்து ஆராய்ந்து பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறும் டெல்லி சட்டமன்றத் தேர்தலைக் கண்காணிக்கும்.

 “சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்துவது தேர்தல் ஆணையத்தின் அரசியலமைப்புச் சட்டப் பொறுப்பு என்றாலும், சமீப காலங்களில் அது நடக்கவில்லை. ஹரியானா, மகாராஷ்டிரா மற்றும் பிற மாநிலங்களில் நியாயமற்ற தேர்தல்களை நாங்கள் கண்டிருக்கிறோம். எனவே, தேர்தல்களில் கவனம் செலுத்தும் ஒரு குழுவை அமைக்க வேண்டிய அவசியம் இருப்பதாக கட்சி உணர்ந்துள்ளது என தெரிவித்துள்ள மூத்த தலைவர் ஒருவர், இந்த குழுவிற்கு ஏன்   EAGLE என்று பெயரிட்டுள்ளோம் என்பது குறித்தும் விளக்கம் அளித்துள்ளார்.

அதன்படி இந்த ஈகிள் குழுவானது,  தேர்தல்கள் தொடர்பான அனைத்தையும் நாங்கள் பருந்துபோல தூரத்திலிருந்து துல்லியமாக கண்காணிக்கும்,  இந்த பெயரை,  அகில இந்திய நிபுணர்கள் காங்கிரஸ் மற்றும் கட்சியின் தரவு பகுப்பாய்வுத் துறையின் தலைவரான சக்ரவர்த்தி,  பரிந்துரைத்ததாகவும், கட்சியின் உயர் தலைமை அதை அங்கீகரித்ததாகவும்  தெரிவித்துள்ளது.