வாஷிங்டன்

மெரிக அதிபர் டிரம்ப் ஈரான் மீது தாக்குதல் நடத்துமா என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த 13-ந்தேதி இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதாக குற்றம்சாட்டி, ஈரான் மீது இ்ஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது.  அணுசக்தி மையங்களையும், ராணுவ நிலைகளையும் குறிவைத்து தாக்குதல் நடத்தியது. ஈரானும் பதிலடியாக தாக்குதலில் ஈடுபட்டது.

இஸ்ரேல் தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து ஈரான் தினந்தோறும் அறிவிப்பது இல்லை. கடைசியாக, கடந்த 16-ந்தேதி வெளியிட்ட அறிவிப்பில், 224 பேர் பலியானதாகவும், 1,277 பேர் காயம் அடைந்ததாகவும் கூறப்பட்டு இருந்தது.

, வாஷிங்டனில் உள்ள ஈரானிய மனித உரிமைக்குழு, ஈரானில் இதுவரை 585 பேர் பலியாகி இருப்பதாகவும், 1,300-க்கு மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் தெரிவித்துள்ளது. அதுபோல், ஈரான் இதுவரை 400 ஏவுகணைகளையும், நூற்றுக்கணக்கான டிரோன்களையும் வீசி தாக்கி உள்ளது. அத்தாக்குதலில் இஸ்ரேலில் 24 பேர் பலியானதாக தெரியவந்துள்ளது.

நேற்று அதிகாலை 5 மணிக்கு டெஹ்ரானில் அடுத்தடுத்து குண்டு சத்தங்கள் கேட்டன. இஸ்ரேலுக்கு பதிலடியாக, ஈரான் ஏவுகணைகளை அலைஅலையாக வீசி தாக்குதல் நடத்தியது. அவற்றில் 10 ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாக இஸ்ரேல் ராணுவம் கூறியது.

ஆனால், சரண் அடைய வேண்டும் என்ற அவரது எச்சரிக்கையை காமெனி நிராகரித்தார். மேலும், ”ராணுவ ரீதியாக அமெரிக்கா தலையிட்டால், அந்நாட்டுக்கு சரிசெய்ய முடியாத அளவுக்கு சேதம் ஏற்படும்” என்று காமெனி எச்சரிக்கை விடுத்தார். ”சியோனிஸ்டுகளுக்கு இரக்கம் காட்ட முடியாது” என்றும் அவர் கூறினார்.

அவரது அறிக்கையை ஈரான் அரசு தொலைக்காட்சி சேனல் வெளியிட்டது. இதுபோல், ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய், ”போரில் அமெரிக்கா தலையிட்டால், முழுஅளவிலான போராக வெடிக்கும்” என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.

ஈரானின் உச்ச தலைவர் அமெரிக்காவை தாக்குவதாக எச்சரித்து, சரணடையுமாறு டிரம்பின் அழைப்பை நிராகரித்த பின்னர், ஈரானிய அணுசக்தி நிலையங்களைத் தாக்கும் முடிவை அமெரிக்கா நெருங்கி வருகிறதா என்பது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பிடம் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு பதிலளித்த அவர், “நான் அதைச் செய்யலாம். செய்யாமலும் இருக்கலாம். அதாவது, நான் என்ன செய்யப் போகிறேன் என்று யாருக்கும் தெரியாது. ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை” என்று கூறியுள்ளார்