சென்னை,
தனியார் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பொதுமக்களிடைய பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. பலர் இந்த நிகழ்ச்சி குறித்து எதிர்ப்பு தெரிவித்தாலும், சமூக வலைதளங்களில் இந்த நிகழ்ச்சி குறித்தே பலவாறு விவாதிக்கப்பட்டு வருகிறது.
தற்போது ஓவியா இல்லாத பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வரவேற்பு குறைந்துள்ளதால், மீண்டும் அவரை களமிறக்க டிவி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களில், ஆரவ், ஓவியா இடையே ஏற்பட்ட நெருக்கம் காரணமாக பிரச்சினைகள் வெடித்தன. இதையடுத்து, பிக்பாஸ் வீட்டில் உள்ள நீச்சல் குளத்தில் ஓவியா தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தார்.
ஓவியாவின் துணிச்சலான கேரக்டர் பிக்பாஸ் நிகழ்ச்சி பார்ப்பவர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் நிகழ்ச்சியில் இருந்து ஓவியா வெளியேறியது நிகழ்ச்சிக்கு கடும் பின்னடைவை உருவாக்கி உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட ஓவியா தற்போது கேரளாவில் தனது குடும்பத்தினருடன் தங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஓவியா மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு திரும்புவார் என கமலஹாசன் சூசகமாக தெரிவித்து உள்ளார்.
ஓவியா இருக்கும் வரை கலகலப்பாக சென்ற பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது டல்லடித்து உள்ளது. இதன் காரணமாக அந்த டிவியின் டிஆர்பி ரேட்டிங்கும் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஓவியா இல்லாத பிக்பாஸ் நிகழ்ச்சி ஏமாற்றம் அளிப்பதாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், 26 வயதான நடிகை ஓவியாவுக்கு புதிய பட வாய்ப்புகள் வந்துள்ளதாகவும், விஷ்ணு விஷால் மற்றும் ரெஜினா கஸ்ஸாண்ட்ராவின் அடுத்த படத்தில் ஓவிய நடித்துள்ளதாக கூறப்படுகிறது. சில்யுகுவர்பட்டி சிங்கம் என்ற படத்தில் சல்லா அய்யுவா எழுதி இயக்கியுள்ளார். படத்தின் படப்பிடிப்பில் நடிகை ஓவியால் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஓவியா குறித்து கருத்து தெரிவித்த கமல்,
உண்மையான நாடக நிகழ்ச்சியை ஒவியா வியத்தகு முறையில் வெளியிட்டார். அவர் மூக்கை பிடித்துக்கொண்டு நீச்சல் குளத்தில் குதித்ததாக கூறப்படுகிறது. அவள் சக போட்டியாளர்களால் காப்பாற்றப்பட்டார், அதன் பிறகு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தார். அந்த பெண் தனது சக போட்டியாளரான ஆராவிற்காக தனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் தவித்தார் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது டிவியின் டிஆர்பி ரேட்டிங் குறைந்து வருவதால், மீண்டும் ஓவியாவை பிக்பாஸ் வீட்டிற்குள் அழைத்து வர டிவி நிர்வாகம் முயற்சித்து வருகிறது.
இதற்காக அவரிடம் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும், ஊதிய விகிதம் அதிகரித்து தருவதாகவும் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும், அதையடுத்து, அனைவருக்கும் மகிழ்ச்சியளிக்கும் வகையில், ஒவியா பிக் பாஸ் வீட்டிற்கு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.