திருவனந்த புரம்.
இன்று திருவனந்தபுரம் விமானநிலையம் கோவில் ஊர்வலத்துக்காக 5 மணி நேரம் மூடப்ப்டுகிறது/

பிரசித்தி பெற்ற பத்மநாபசுவாமி கோவில் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது. இக் கோவிலின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான ‘பங்குனி ஆறாட்டு’ ஊர்வலத்தின்போது, சுவாமி சிலைகள் கோவிலில் இருந்து சங்குமுகம் கடற்கரைக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு புனித நீராடல் நடத்தப்படுகிறது.
இன்று நடைபெறும் இந்த ஊர்வலமானது திருவனந்தபுரம் விமான நிலைய ஓடுபாதை வழியாக ஆண்டு தோறும் செல்கிறது. எனவே ஒவ்வொரு ஆண்டும் பத்மநாபசுவாமி கோவில் ஆறாட்டு ஊர்வலத்திற்காக திருவனந்தபுரம் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுகிறது.
அவ்வகையில், பத்மநாபசுவாமி கோவிலில் இன்று பங்குனி ஆறாட்டு ஊர்வலம் நடைபெறுகிறது. எனவே இன்று மாலை 4 முதல் இரவு 9 மணி வரை திருவனந்தபுரம் விமான நிலையம் மூடப்படுகிறது இந்த சமயத்தில் விமானங்களின் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக திருவனந்தபுரம் விமான நிலையம் தெரிவித்துள்ளது.