அகர்தலா: வாக்குப்பதிவுக்குப் பிந்தைய வன்முறையில் பாதிக்கப்பட்ட தனது ஆதரவாளர்களுக்கு இழப்பீடு பெறுவதற்கு உச்சநீதிமன்றத்தை நாட முடிவுசெய்துள்ள திரிபுரா மாநில காங்கிரஸ், காயமடைந்த தனது ஆதரவாளர்களுக்கு சிகிச்சையளிக்க நிதி சேர்ப்பு நடவடிக்கைகளையும் தொடங்கியுள்ளது.
காயம்பட்ட ஆதரவாளர்களுக்கான நிதிசேர்ப்பு நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பை அம்மாநில காங்கிரஸ் தலைவர் பிரத்யோத் தேப் பர்மன் தெரிவித்தார்.
மேலும், நிதிசேர்ப்பு நடவடிக்கையில் தனது பங்காக ரூ.10 லட்சத்தை அளித்துள்ளதாகவும், இதைப் பின்பற்றி பிற காங்கிரஸ் நிர்வாகிகளும் தங்களின் பங்களிப்பை வழங்க வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மே மாதம் 23ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதில், அம்மாநிலத்தின் 2 இடங்களையும் பாரதீய ஜனதா கைப்பற்றியது. அதனையடுத்து வெடித்த கலவரத்தில் 3 பேர் பலியானதுடன், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.