கொல்கத்தா

திருணாமுல் காங்கிரஸ் மேற்கு வங்கத்தில் உள்ள 42 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியில் திருணாமுல் காங்கிரஸ் இருந்தாலும் மம்தா பானர்ஜி, தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்து இருந்தார். தேர்தலில் காங்கிரஸ் அதிக தொகுதிகளை கேட்டு அதனை மம்தா தரவில்லை. எனவே பிரச்சினைகலை பேசி சுமுக தீர்வு காணப்படும் எனக் காங்கிரஸ் கூறியிருந்தது.

நேற்று கொல்கத்தாவில் நடந்த பேரணியில் 42 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகம் செய்து வைத்த மம்தா பானர்ஜி ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளுக்கு இடம் கிடையாது என்பதை மீண்டும் உறுதி செய்துள்ளார். ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினர்கள்.16 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில்  12 பெண்கள் இடம்ப்பெற்றுள்ளனர்.

மக்களவையில் கேள்வி கேட்க லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட மஹுவா மொய்த்ராவுக்கு கிருஷ்ணா நகர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. பெண்கள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்ட நிகழ்வு நடந்த சந்தேஷ்காலி பகுதி அமைந்துள்ள பஷீர்ஹட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர். நுஷ்ரத் ஜகானுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. ஹஜி நூருல் இஸ்லாம் அறிவிக்கப்பட்டு உள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் பஹரம்பூர் தொகுதியில் களமிறங்குகிறார். இந்த தொகுதியில் தற்போது காங்கிரஸ் கட்சியின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நாடாளுமன்ற உறுப்பினர்.ஆக உள்ளதால் அவர் மீண்டும் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பர்தமான்- துர்காபூர் தொகுதியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கீர்த்தி ஆசாத் களமிறக்கப்பட்டு உள்ளார்.