பெங்களூரு:
 உடல் நலமில்லாமல் மரணம் அடைந்த கர்நாடக முதல்வர் மகனின் இறுதிச் சடங்கு இன்று மைசூரில்  நடைபெற்றது. மகனின் உடலுக்கு சித்தராமைய்யா இறுதி அஞ்சலி செலுத்தினார்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா, அவது மனைவி பெயர் பார்வதி. இவர்களுக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் பெயர் ராகேஷ்.  இளைய மகன் பெயர் யதீந்திரா. ராகேஷ் கன்னட சினிமா படத்திலும்  நடித்துள்ளார். இளைய மகன் யதீந்திரா டாக்டராக உள்ளார்.
முதல்வர்
ராகேஷ் தனது 39 வது பிறந்த நாளை கொண்டாடுவதற்காக  பெல்ஜியம் சென்றார். அங்கு தமது நண்பர்களுடன் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்று பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினார்.
அவருக்கு பெல்ஜியத்தில் இருக்கும்போது உடல்நலம் இல்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்ககப்பட்டார். அங்கு சோதனையின் போது ராகேஷ் கிட்னி, மற்றும் சிறுநீரகம் தொடர்பான நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது.
இதன் காரணமாக பெல்ஜியம் பிரஸ்ஸல்சில்  உள்ள  ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் . ஆனால் சிகிச்சை பலனின்றி  இறந்து போனார்.
அவரது  உடல் விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது. பொதுமக்கள் மற்றும் திரையுலக நண்பர்கள் அஞ்சலி செலுத்தியதை அடுத்து இன்று மைசூரில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இறுதிச்சடங்கின்போது, மகனின் உடலுக்கு அவர்  கண்ணீர் விட்டு அழுதபடி அஞ்சலி செலுத்தினார்.  அவருடன்  அமைச்சர்கள், உயர் அதிகாரிகள்  கலந்து கொண்டனர்.