மதுரை:
ராஜஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் உடல் சென்னையிலிருந்து இன்று மாலை 6.25 மணிக்கு ஸ்பைஸ் ஜெட் விமானம் மூலம் மதுரைக்கு இரவு 7.25 மணிக்கு கொண்டு வரப்பட்டது.
மதுரை விமானநிலையத்தில் அவரது உடலுக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கலெக்டர் வீரராகவ ராவ், போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், உயரதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து பெரியபாண்டியன் உடல் சாலை வழியாக நெல்லை கொண்டு செல்லப்பட்டது.