ஷிபால்

உக்ரைன் ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தில் பயணம் செய்து மரணம் அடைந்த 298 பேருக்கு மூன்றாம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.  இதில் 298 மரங்கள் நடப்பட்டன.

ஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலம்பூர் நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் உக்ரைன் ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது.  அந்த விமானம் கிளம்பிய ஷிபால் விமானநிலையத்தின் அருகில் உள்ள ஒரு பூங்காவில், மரணம் அடைந்தவர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.

கடந்த 2014 ஜூலை மாதம் 17ஆம் தேதியன்று நடந்த இந்த கோரசம்பவம் இன்னும் யாராலும் மறக்கப்படவில்லை.  மரணம் அடைந்தவர்களின் நினைவாக  298 மரங்கள் நடப்பட்டன. இதில் அரசர் வில்லேம் அலெக்சாண்டர் மற்றும் அரசி மேக்சிமா ஆகியோரும் கலந்துக் கொண்டனர்.  மரணம் அடைந்தோரின் உறவினர்களும் கலந்துக் கொண்டனர்.

மரணம் அடைந்தோரில் பெரும்பாலானவர்கள் டச் நாட்டை சேர்ந்தவர்கள்.  அது தவிர ஆஸ்திரேலியா, பிரிட்டன், மலேசியா, இந்தோநேசிய நாட்டை சேர்ந்தவர்களும் இறந்து விட்டனர்.  இந்த மரங்கள் இவர்களுக்காக மட்டுமின்றி பயங்கரவாதத்தால் மரணம் அடைந்தவர்கள் அனைவரின் நினைவுக்காகவும் நடப்பட்டுள்ளதாக  தெரிவித்தனர்.

ஒவ்வொரு மரத்திலும் மரணமடைந்த ஒருவரின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.  அந்த மரங்களைச் சுற்றி சூரியகாந்தி செடிகள் நடப்பட்டுள்ளன.  விமானத்தின் பாகங்கள் உக்ரைனில் உள்ள ஒரு சூரியகாந்தி தோட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் இவைகள் நடப்பட்டுள்ளதாக தெரிகிறது

மரங்கள் மேலிருந்து பார்க்கும் போது ஒரு மனிதனின் கண் போன்ற வடிவில் நடப்பட்டுள்ளன.  பூமியே இவர்களின் மறைவுக்கு கண்ணீர் வடிப்பது போல அமைப்பில் உள்ளது.

இந்த சம்பவம் நடந்து மூன்று வருடங்கள் ஆகியும், இது வரை இது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.