டெல்லி:

ருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி  சிகிச்சை முடிந்து இன்று டெல்லி திரும்பினார்.

சிறுநீரகம் பாதிப்பு காரணமாக ஏற்கனவே சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட அருண்ஜெட்லி, மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வந்தார்.

இதன் காரணமாக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யும் சமயத்தில் சிகிச்சைக்காக அவர் அமெரிக்கா சென்றதால், நிதி அமைச்சர் பொறுப்பு தற்காலிகமாக மத்திய ரெயில்வேத்துறை மந்திரி பியுஷ் கோயலிடம், கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது. அவர் இந்த ஆண்டுக்கான இடைக்கல நிதிநிலை அறிக்கையை  தாக்கல் செய்தார்.

இந்த நிலையில்,  கடந்த மாதம் 15-ம் தேதி  அமெரிக்கா சென்ற அருண்ஜெட்லி, சிகிச்சை முடிந்து இன்று டில்லி திரும்பினார்.   இதுதொடர்பான தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தாயகம் திரும்பியதில் மகிழ்ச்சியடைவதாக குறிப்பிட்டுள்ளார். |  |