கொல்கத்தா:

நமது கணிணி பயன்பாட்டை கண்காணிக்க முயன்ற மோடி அரசின் முயற்சியை முறியடித்த ஒரே அரசியல்வாதியாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ மஹுவா மொய்த்ரா திகழ்கிறார்.


மேற்கு வங்காளம் மற்றும் பங்களாதேஷ் எல்லையில் உள்ள சிறு நகரத்தைச் சேர்ந்தவர் மஹுவா மொய்த்ரா. இவர் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏவாகவும் இருக்கிறார்.

நமது சமூக வலைதளங்களையும், நம் கணிணி பயன்பாட்டையும் கண்காணிக்க முயன்ற மோடி அரசின் முயற்சியை நீதிமன்றம் சென்று முறியடித்திருக்கிறார்.

ஆதார் மூலம் சமூக வலைதளங்களை கண்காணிப்பது, கணிணி பயன்பாட்டை கண்காணிக்க 10 ஏஜென்சிகளை அமைக்கும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பு, மேற்கு வங்காளத்தில் கணிணிகளை கண்காணிக்க இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்ற 3 வழக்குகளை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்தார்.

இதனையடுத்து, அட்டார்னி ஜெனரல் வேணுகோபால் ஆஜராகி, இவ்வாறு கண்காணிக்கும் தகவல் ஒலிபரப்புத் துறையின் நடவடிக்கையை திரும்பப் பெறுவதாக அறிவித்தார்.

ஆதார் மூலம் கண்காணிக்கும் முடிவில் சில மாற்றங்களை மட்டுமே செய்ய முடியும் என்று வேணுகோபால் தெரிவித்தார்.

நீதிமன்றத்தில் இவர் தாக்கல் செய்த வழக்குகள்தான் மோடி அரசின் கண்காணிப்பு நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.

சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் நம்மில் எத்துனை பேருக்கு மஹுவா மொய்த்ராவின் இந்த போராட்டம் பற்றி தெரிந்திருக்கப் போகிறது?