பாரதிய ஜனதா கட்சி மீது அதிருப்தி: காங்கிரஸ் கட்சியில் சேருகிறார்  பீகார் பாஜக எம்.பி. கீர்த்தி ஆசாத்

Must read

பாட்னா:

பீகாரில் 3 முறை பாரதிய ஜனதா கட்சி எம்.பி.,யாக இருந்த கீர்த்தி ஆசாத், பாஜக தலைமை மீது கொண்ட அதிருப்தி காரணமாக  காங்கிரசில் இணைய முடிவு செய்துள்ளார். இது பாஜக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பீகாரை சேர்ந்த பா.ஜ., கட்சியின் அதிருப்தியாளர் கீர்த்தி ஆசாத். பாரதிய ஜனதா சார்பில் 3 முறை தர்பாங்கா தொகுதியில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த இவர், அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர முடிவு செய்துள்ளார்.

வரும் பிப்., 15 ல் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல்காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைய இருப்பதாக அறிவித்து உள்ளார்.  அதைத்தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலில், இவருக்கு பீகாரின் தர்பாங்கா தொகுதி ஒதுக்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது.

More articles

Latest article