ட்ரீட்மென்ட் கிடையாது கிளம்புங்க…போலீசுக்கே இந்த கதி?..

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில்  கொரோனா வைரசுக்கு ஏற்கனவே இரண்டு போலீசார் பலியாகியுள்ளனர்.

இந்த நிலையில் அங்குள்ள குர்லா பகுதியில் போக்குவரத்து பிரிவில் பணிபுரியும் காவலருக்குக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

பரிசோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது கடந்த 21 ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது.

காவலரின் மகன் அடுத்தடுத்து மூன்று மருத்துவமனைகளுக்குத் தந்தையை அழைத்துச் சென்றுள்ளார்.

‘பெட் இல்லை. ஊசி இல்லை’’ என்று மூன்று மருத்துவமனைகளும் காவலரை அனுமதிக்க மறுத்து விட்டன.

கடைசியில் கிங் எட்வர்டு நினைவு மருத்துவமனையில், சில பல சிபாரிசுகளுக்கு மத்தியில் சேர்க்கப்பட்ட காவலர் நேற்று இறந்தே போனார்.

‘’ என் தந்தையை ’அங்கே போ..இங்கே போ’ என்று  மூன்று மருத்துவமனை ஊழியர்கள் அலைக்கழித்ததால் தான் அவர் இறந்து போனார். 28 ஆண்டுகளாக அவை போலீசில் வேலை பார்த்து வந்தார்’’ என்று கண்ணீர் வடிக்கிறார், அவரது மகன்.

– ஏழுமலை வெங்கடேசன்

[youtube-feed feed=1]