சென்னை

திமுக தொழில்நுட்ப அணிச் செயலாளராக டி ஆர் பி ராஜா எம் எல் ஏ நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று திமுக தலைமைக் கழகம்  இரு அறிவிப்புக்களை வெளியிட்டுள்ளது.  அதில் ஒன்றில், ”தி மு கழக தகவல் தொழினுட்ப அணிச் செயலாளராக பணியாற்றி வந்த தமிழக நிதித்துறை அமைச்சர் மாண்புமிகு பி டி ஆர் பழனிவேல் ராஜன் அவர்கள் அரசுப் பணிகளில் முழுக் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால் அப்பொறுப்பிலிருந்து விலகிக் கொள்வதாகக் கழகத் தலைவர் அவர்களிடம் கொடுத்த கடிதத்தை எற்றுக் கொண்டு விடுவித்து,

கழக சட்ட திட்ட விதி 31 – பிரிவு,: 19-ன் படி அவருக்கு பதிலாக கழக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளராக திரு . டி ஆர் பி ராஜா எம் எல் ஏ (எண் 1202, 6வது அவென்யூ, இசட் பிளாக், அண்ணா நகர், சென்னை 600040) அவர்கள் நியமிக்கப்படுகிறார்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு அறிக்கையில், “அயலக அணிச் செயலாளராக பணியாற்றி வந்த திரு. டி பி ராஜா எம் எல் ஏ அவர்கள் கழக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளராக நியமிக்கப்பட்டதால்

 

கழக சட்டதிட்ட விதி 31 – பிரிவு 20 ன்படி அவருக்கு பதிலாக மாநிலங்களவை உறுப்பினர் திரு எம் எம் அப்துல்லா எம் பி ஏ அவர்கள் (ரயில்வே ஸ்டேசன் ரோடு, ராஜகோபாலபுரம் அஞ்ச, புதுக்கோட்டை – 62200) அயலக செயலாளராக நியமிக்கப்படுகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.