பயணவழி உணவகங்கள் மாற்றம் : அரசு பேருந்து பயணிகள் வரவேற்பு

Must read

சென்னை

மிழகத்தில் அரசு பேருந்துகள் பயண வழி உணவகங்கள் மாற்றப்பட்டதைப் பயணிகள் வரவேற்றுள்ளனர்

நெடுந்தூரம் தமிழக அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள், பேருந்து நிறுத்தப் படும் பயண வழி உணவகங்களில் தான் சாப்பிட வேண்டும் என்ற நிலை இருந்தது. அங்குத் தரமற்ற உணவுகளையும், குளிர்பானங்களையும் மும்மடங்கு அதிக விலை கொடுத்து வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். தவிர இயற்கை உபாதை கழிப்பதற்கான கட்டணத்தை ரூ.10 வரை வசூலிப்பது மட்டுமின்றி, அதற்கான இடம் சுகாதாரமற்ற முறையில் இருப்பது போன்ற துயரங்களைப் பயணிகள் சந்திப்பது பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

அரசு போக்குவரத்து ஊழியர்கள் இதற்கு உடந்தையாக இருப்பது தொடர் பாக விமர்சனங்கள் எழுந்தன. இதையொட்டி அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் தலைமையில் போக்குவரத்துக்கழக அலுவலர்கள் குழு, நெடுஞ்சாலை தனியார் உணவகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டது. ஆய்வில் தரமற்ற உணவு வழங்கப்பட்டது கண்டறியப்பட்டது. எனவே அந்த உணவகங்களில் அரசுப்பேருந்துகளை நிறுத்த தடை செய்யப்பட்ட து,

இந்த உணவகங்களில் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் நிறுத்துவ தற்காக போடப்பட்டுள்ள ஒப்பந்தங்களை ரத்து செய்யப்பட்டது.   அரசுப் பேருந்துகள் எந்தெந்த பயணவழி உணவகங்களில் நிறுத்தப்பட வேண்டும் என விதிமுறை வகுக்கப்பட்டு, அதன்படி தான் பேருந்துகள் நிறுத்தப்பட வேண்டும் என ஓட்டுநர்களுக்கும், போக்குவரத்துக் கழகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

கடந்த இரு தினங்களாக நெடுந்தூரம் செல்லும் பேருந்துகள் உயர்தர சைவ உணவகங்களில் நிறுத்தப்பட்டு பயணிகள் உணவருந்திச் செல்கின்றனர்.

இது குறித்து அரசு பேருந்து பயணிகள், “தற்போது சிற்றுண்டிகள் அதிகபட்ச விலையை விடக் கூடுதலாக விற்கப்படுவதில்லை என்பதால் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.  நாங்கள் நெடுந் தொலைவு பயணிப்பதால் பெரும்பாலும் சைவ உணவே அருந்துவோம். இப்போது சுகாதாரமான உணவு கிடைப்பதுடன் கழிப்பறை சுத்தமாக இருப்பதோடு, அவற்றுக்குக் கட்டணமும் வசூலிப்பதில்லை.  இதை நாங்கள் வரவேற்கிறோம்” என கூறினர்

 

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article