ஜெனிவா
ஒமிக்ரான் பரவலை பயணத்தடைகள் மூலம் தடுக்க முடியாது எனவும் மாறாகத் தடைகளால் கடும் பாதிப்பு உண்டாகும் எனவும் உலக சுகாதாரம் அமைப்பு தெரிவித்துள்ளது
தென் ஆப்ரிக்காவில் கடந்த மாதம் 24 நான்காம் தேதி உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இது உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதுவரை கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ்களான ஆல்பா, பீட்டா, காமா, செல்டா வைரஸ்களை விட இந்த ஒமிக்ரான் மிகவும் பயங்கரமானது எனவும் 50 முறை உருமாற்றம் கொண்டுள்ளது எனவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்
ஒமிக்ரான் கொரோனா பாதிப்பு உள்ள நாடுகளைச் சேர்ந்த மக்கள் தங்கள் நாடுகளுக்கு வருவதைத் தடுக்க, சில நாடுகள் பயணத் தடை விதித்துள்ளன. உலக சுகாதார அமைப்பு ஒமிக்ரான் பாதிப்புள்ள தென்னாப்பிரிக்கா, சீனா, நியூசிலாந்து, ஹாங்காங், பிரிட்டன், பிரேசில், வங்கதேசம், போட்ஸ்வானா, மோரீஷஸ், ஜிம்பாப்வே, சிங்கப்பூர், இஸ்ரேல் உள்ளிட்ட நாட்டு மக்களுக்கு பயணத் தடைகள் விதிப்பதன் மூலம் ஒமிக்ரான் தொற்று பரவலைத் தடுத்து நிறுத்திவிட முடியாது என்று கூறியுள்ளது.
மேலும் பயண தடைகளால், மக்களின் வாழ்வாதாரம் பெரும் சுமையாக மாறிவிடும் என்றும் உலகளாவிய சுகாதார முயற்சிகளை மோசமாக பாதிக்கும் என்றும் தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் நோய் தொற்றுக்களை எதிர்த்துப் போராடச் சர்வதேச உடன்படிக்கை அவசியம் என்றும் உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.