சென்னை: அரசு போக்குவரத்து பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டது ஓபிஎஸ் கூறியதால் இல்லை என அமைச்சர் ராஜகண்ணப்பன் காட்டமாக பதில் அளித்துள்ளார்.
தமிழகஅரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டங்களில் ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்கவேண்டிய ஓய்வூதிய பண பயன்களின் நிலுவைத்தொகையான ரூ.497.32 கோடிகை ஒதுக்கி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். மேலும், 2 ஆயிரத்து 457 ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்கிடும் அடையாளமாக, சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 6 போக்குவரத்து ஊழியர்களுக்கு நிலுவைத்தொகைக்கான காசோலையை வழங்கினார்.
இதற்கு முன்னாள் துணைமுதல்வரும், அதிமுக எம்எல்ஏவுமான ஓபிஎஸ் தனது கோரிக்கையை ஏற்று அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், செய்தியளார்களை சந்தித்த அமைச்ச ராஜகண்ணப்பன், போக்குவரத்து பணியாளர்கள் 2,454 பேருக்கு ₨472.92 கோடி ஓய்வூதிய பயன்கள் வழங்கப்பட்டுள்ளது ஓபிஎஸ் கூறியதால் இல்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.,
திமுக அரசு என்றும் தொழிலாளர் நலன் மீது அக்கறை கொண்ட அரசு எனறு கூறிய அமைச்சர் ராஜகண்ணப்பன், போக்குவரத்து கழக பணியாளர்களின் ஓய்வூதிய பலன்கள் அவர்களுக்கு வங்கிக்கணக்கில் வரவு வைங்ககப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்தார்.