சென்னை: போக்குவரத்துத்துறை ரூ.48 ஆயிரம் கோடி நட்டத்தில் இயங்குகிறது அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்து உள்ளார்.

மக்களுக்காக நடத்தப்படும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள், பெரும்பாலும் நஷ்டத்திலேயே இயங்கி வருகின்றன. இதனால், அதில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம், ஓய்வூதியம் உள்பட பணிக்கொடைகளும் வழங்கப்படாத சூழலே உள்ளது.
இந்த நிலையில், திமுக அரசு பதவி ஏற்றதும், தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, பெண்களுக்கு இலவச பயணத்தை அறிவித்தது. இதனால் சாதாரண அப்பாவி மக்களை நடுத்த வர்க்கத்தினரும், பல ஆயிரம் சம்பளம் பெறும் அரசு ஊழியர்களுமே அதன் பயனை அனுபவித்து வருகின்றனர். இன்று அப்பாவி ஏழை ஒருவர் அரசு பேருந்தில் கோழிக்குஞ்சுக்களை எடுத்துச் சென்றதற்கும் டிக்கெட் வசூலித்துள்ளார். இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜகண்ணப்பன், தமிழக போக்குவரத்துத்துறை 48 ஆயிரம் கோடி ரூபாய் நட்டத்தில் இயங்குவதாகவும் அதனை சரி செய்ய தொழிற்சங்க செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டி ஆலோசிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இலவச பணத்திட்டத்தை ஒழுங்குபடுத்தினாலே, தற்போது ஏற்பட்டுள்ள நஷ்டத்தில் பாதியை குறைக்க முடியும். ஆனால், அதை செய்ய துணியாமல், நஷ்டத்தில் இயங்குவதாக புலம்புவது ஏனோ என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.