சென்னை

ரும் ஆகஸ்ட் 27 ஆம் தேதி போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது.

நேற்று அரசு போக்குவரத்து கழகங்களின் வரவுக்கும், செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும். போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக, தொழிற்சங்கங்கள், போக்குவரத்து கழக நிர்வாகிகள் பங்கேற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தொழிலாளர் தனி இணை ஆணையர் எல்.ரமேஷ் முன்னிலையில் நடந்தது.

இந்த கூட்டத்தில் சென்னை மாநகர போக்குவரத்து கழக இணை மேலாண் இயக்குனர் எஸ்.நடராஜன், விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் ஆர்.மோகன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் சி.ஐ.டி.யு. தொழிற்சங்க பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார், ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க பொதுச்செயலாளர் ஆறுமுகம், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன், நாம் தமிழர் தொழிற்சங்க பேரவை மாநில தலைவர் அன்புத்தென்னரசன், பொதுச்செயலாளர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இத கூட்டத்தில் சரியான முடிவுகள் எட்டப்படாத நிலையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. எனவே அடுத்தகட்டமாக வருகிற ஆகஸ்டு 27-ந் தேதி நடைபெற இருக்கும் 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையுடன் இந்த கோரிக்கைகளையும் பேசலாம் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.