சென்னை
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் நாளையும் தொடரும் என தொழிற்சங்க கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
இன்று சென்னை எழும்பூரில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு ஆலோசனை நடத்தியது. இதில் தொ மு ச , சிஐடியூ உட்பட 22 தொழிற்சங்க அமைப்பினர் கலந்துக் கொண்டனர். இதில் எடுக்கப்பட்ட முடிவு பற்றி சி ஐ டி யு அமைப்பின் சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, ”தொழிலாளரகளின் பிரச்னை தீரும் வரை போராட்டம் தொடரும். தற்காலிக ஓட்டுனர்கள் அரசு பேருந்தை இயக்குவதால் தான் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. தொழிலாளர்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்து முதல்வர் வேலை நிறுத்தத்தை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போக்குவரத்துக் கழகம் ஓடாத பேருந்துகளை ஓடியதாக காட்டி நிதி முறைகேடு நடத்தி இருக்க வாய்ப்பு உள்ளது. கழகத்தின் நஷ்டத்துக்கு தொழிலாளர்கள் காரணம் இல்லை. நாளை நீதி மன்றத்தில் எங்கள் தரப்பு வாதங்கள் முன் வைக்கப்படும்” என சவுந்தரராஜன் கூறி உள்ளார்.