சென்னை
பணிக்கு வராத தொழிலாளர்களிடம் விளக்கம் கேட்டு போக்குவரத்துத் துறை நோட்டிஸ் அனுப்பி உள்ளது.
தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சருடன் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்கள் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தது. அதையொட்டி இன்று நான்காம் நாளாக தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 90% வரை பேருந்துகள் ஓடவில்லை.
உயர்நீதிமன்றம் தொழிலாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என உத்தரவிட்டும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை தொடருகின்றனர்.
பணிக்கு வராத போக்குவரத்து தொழிலாளர்களிடம் விளக்கம் கேட்டு தமிழ்நாடு போக்குவரத்துத் துறை நோட்டிஸ் அனுப்பியுள்ளது. இன்னும் 7 நாட்களுக்குள் சரியான விளக்கம் அளிக்கவில்லை எனில் துறை ரீதியில் நடவடிக்கை எடுக்கப் படும் என அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.