ஆம்னி பேருந்துகள் இன்று இரவு முதல் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையத்தில் இருந்து மட்டுமே இயக்கப்பட வேண்டும் என்று போக்குவரத்து ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
கிழக்கு கடற்கரை சாலை வழியாகவும், வேலூர் உள்ளிட்ட மேற்கு மார்க்கமாகவும் மற்றும் சித்தூர், ரெட்ஹில்ஸ் உள்பட வடக்கு மார்க்கமாக செல்லும் ஆம்னி பேருந்துகள் மட்டும் வழக்கம் போல் கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.
மற்ற அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே புறப்பட வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
போக்குவரத்து ஆணையரின் இந்த உத்தரவை மீறினால் மோட்டார் வாகன சட்டம் மட்டுமன்றி கிரிமினல் சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், அபி பஸ், ரெட் பஸ் உள்ளிட்ட டிக்கெட் முன்பதிவு செயலிகளில் அதற்கான மாற்றம் செய்யவும் அறிவுறுத்தியுள்ளது.
தொடர் விடுமுறை காரணமாக தென் மாவட்டங்கள் உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் போக்குவரத்துத் துறையின் இந்த அதிரடி நடவடிக்கையால் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர்.