புதுடெல்லி,
டெல்லியில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் திருநங்கைகள்    பாதுகாப்பு மசோதா அறிமுகப்படுத்த ஒப்புதல் வழங்கியுள்ளது.
transjender
நேற்று மாலை டெல்லியில்  மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்றம்ம  முடக்கப்படுவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. மேலும் பல மசோதாக்கள் இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது பற்றியும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
மேலும் இந்த கூட்டத்தில் திருநங்கைகள் பாதுகாப்பு சட்ட மசோதா, 1,011 கோடி ரூபாய் செலவில் உத்தரபிரதேசத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக மசோதா,  இந்தியா – மொசாம்பி இடையே விமான போக்குவரத்து மசோதா, கேரள மாநிலம் கொச்சியில் 1,799 கோடி ரூபாய் செவில் உலர் துறைமுக திட்டம் அமைப்பதற்கான மசோதா, பினாமி மூலம் சொத்து சேர்ப்பதை தடுப்பதற்கான மசோதா உள்ளிட்ட  பல மசோதாக்கள் நிறைவேற்ற ஒப்புதல்  பெறப்பட்டதாக தெரிகிறது.
திருநங்கைகளுக்கான உரிமைகளை பாதுகாக்க வகை செய்யும்  மசோதா இந்த கூட்டத்தொடரிலேயே தாக்கல் செய்யப்படலாம் என தெரிகிறது.