டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11 கோடியே 95 லட்சத்துக்கு 77ஆயிரத்து 206 ஆக உயர்ந்துள்ளது. ஆனால்,  கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 84,047 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. அதுபோல கடந்த 24 மணி நேரத்தில்   2,152 பேர்பலியாகி உள்ளனர்.

உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு அமெரிக்காவில் அதிக அளவில் தொடர்ந்து வருகிறது. தற்போது,முதலிடத்தை பிரேசில் பிடித்துள்ளது. பிரேசில் நாட்டில் அதிகபட்சமாக 75,412 பேருக்கும் அமெரிக்காவில் 63,831 பேருக்கும் பிரான்ஸ் நாட்டில் 25,229 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை உலகெங்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,95,93,594 ஆக உயர்ந்துள்ளது.

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 84,047 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.  இதுவரை பாதிக்கப்பட்டோர்  மொத்த எண்ணிக்கை 1 கோடியே 13 லட்சமாக உயர்நதுள்ளது. நேற்று மட்டும்  61,662  பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 99 லட்சமாக உயர்நதுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்  2,152 பேர் பலியான நிலையில், இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 27ஆயிரத்தை தாண்டியுள்ளது.

கொரோனா தொற்று உருமாறிய நிலையில், மீண்டும் பரவி வருகிறது.  ஐரோப்பிய நாடுகளில் வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. உலகெங்கும் கொரோனா பாதிப்பு மோசமாக உள்ள 10 நாடுகளில் 6 நாடுகள் ஐரோப்பாவைச் சேர்ந்தவை. பிரிட்டன் உருமாறிய கொரோனா வைரஸ் காரணமாகப் பாதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.