சென்னை:  தமிழகத்தில் கொரோனா பொதுமுடக்கத்தில் இருந்து போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளதால், செப்டம்பர் 7 முதல் மாநிலங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து தொடங்குகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் 6  சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

அதன்படி,  சென்னையில் இருந்து மதுரைக்கு பாண்டியன் எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில், தூத்துக்குடிக்கு முத்துநகர் எக்ஸ்பிரஸ், கோயம்புத்தூருக்கு சேரன் எக்ஸ்பிரஸ், மேட்டுபாளையத்திற்கு நீலகிரி எக்ஸ்பிரஸ், செங்கோட்டைக்கு சிலம்பு எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளாக 6 சிறப்பு ரயில்களும் செப்டம்பர் 7-ம் தேதி முதல் இயக்கப்படும்.

சென்னை-கன்னியாகுமரி,
சென்னை-மேட்டுப்பாளையம்,
சென்னை-செங்கோட்டை,
சென்னை எழும்பூர்-மதுரை
சென்னை எழும்பூர் – திருச்சி
சென்னை சென்ட்ரல் – கோவை இண்டர்சிட்டி

மேலும், சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் – கோவை இண்டர்சிட்டி,  சென்னை எழும்பூர் – திருச்சி கோவை – மயிலாடுதுறை ஜன சதாப்தி எக்ஸ்பிரஸ் ஆகிய சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் உத்தரவு