சேலம்
தண்டவாள பராமரிப்பு பணிக்காக கோவை பகுதியில் ரயில்சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே சேலம் கோட்ட அதிகாரி,
”கோவை மாவட்டம் இருகூர் ரயில் நிலையத்தில் தண்டவாளம் பராமரிப்பு பணியால் குறிப்பிட்ட ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
எர்ணாகுளம்-டாடாநகர் எக்ஸ்பிரஸ்(வண்டி எண்.18190) இன்று(புதன்கிழமை) போத்தனூர்-கோவை-இருகூர் வழியாக இயக்கப்படும்.
ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ்(13352) இன்று 25 நிமிடங்கள் வசதியான இடத்தில் நிறுத்தப்படும்.
திருச்சி-பாலக்காடு எக்ஸ்பிரஸ்(16843) வருகிற 4 மற்றும் 6-ந் தேதிகளில் சூலூரில் இருந்து பாலக்காடுக்கு முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரயிலாக இயக்கப்படும்.”
என அறிவித்துள்ளார்.