திருப்பூர்
தெற்கு ரயில்வே இருகூர் – பீளமேடு இடையே பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் ரயில் சேவையில் மாற்றம் செய்துள்ளது/

தெற்கு ரயில்வேயின் சேலம் ரயில்வே கோட்ட அதிகாரி மரியா மைக்கேல்.
”இருகூர்-பீளமேடு ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அந்த பணிகளை எளிதாக்கும் வகையில் போத்தனூர்-இருகூர் வழியாக குறிப்பிட்ட ரயில்கள் திருப்பி விடப்படும். திருவனந்தபுரம்-மைசூரு தினசரி எக்ஸ்பிரஸ் (வண்டி எண்.16316) மற்றும் கன்னியாகுமரி-திப்ருகார் எக்ஸ்பிரஸ்(22503) நாளை(வியாழக்கிழமை) முதல் வருகிற 13-ந்தேதி வரை போத்தனூர்-இருகூர் வழியாக திருப்பி விடப்படும்.
அந்த நாட்களில் கோவை ரயில் நிலையத்தை தவிர்த்து போத்தனூர் ரயில் நிலையத்தில் மாற்று நிறுத்தத்தை கொண்டிருக்கும். கன்னியாகுமரி-ஸ்ரீமாதா வைஷ்ணோ தேவி கத்ரா வாராந்திர எக்ஸ்பிரஸ்(16317) வருகிற 12-ந்தேதி போத்தனூர்-இருகூர் வழியாக திருப்பி விடப்படும்.
இதனால் போத்தனூரில் மாற்று நிறுத்தத்தை கொண்டிருக்கும். எர்ணாகுளம்-பாட்னா வாராந்திர எக்ஸ்பிரஸ்(22669) வருகிற 13-ந்தேதி போத்தனூர் ரயில் நிலையத்தில் மாற்று நிறுத்தத்தை கொண்டிருக்கும். சென்னை-மேட்டுப்பாளையம் நீலகிரி தினசரி எக்ஸ்பிரஸ்(12671) நாளை முதல் வருகிற 13-ந்தேதி வரை இருகூர்-போத்தனூா் வழியாக திருப்பி விடப்படும்.
விசாகப்பட்டினம்-கொல்லம் வாராந்திர எக்ஸ்பிரஸ்(18567) வருகிற 11-ந்தேதி இருகூர்-போத்தனூர் வழியாக திருப்பி விடப்படும். இந்த ரயில் கோவை சந்திப்பை தவிா்த்து போத்தனூரில் மாற்று நிறுத்தத்தை கொண்டிருக்கும். ”
என அறிவித்துள்ளார்.